கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு மாவட்டத்தில் 452 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் இம்மாதம் 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 2,030 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 417 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 257 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 123 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 107 பேரும், யாழ்ப்பாணத்தில் 103 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.






Discussion about this post