இலங்கையின் பிரபல ஆடை விற்பனை நிலையமான House of Fashions, தனது பம்பலப்பிட்டி விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை (21) ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தெளிவுபடுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வாகன நிறுத்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த மோதல் ஏற்பட்டதாக குறித்த ஆடை விற்பனை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.“கார் தரிப்பிடத்தில் தனது காரை மற்றொரு வாகனம் தடுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார். ஊழியர்கள் உடனடியாக பிஏ அமைப்பு மீது இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டனர்.இதன் போது, வாடிக்கையாளர் முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதன் பின்னர் அவர் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.மோதலை முறியடிக்க நிறுவன ஊழியர்கள் முயற்சித்த போதிலும், வாடிக்கையாளர் பாதுகாப்பு அதிகாரியை தொடர்ந்து தாக்கியதால், ஊழியர்கள் பதிலடி கொடுத்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த விற்பனை நிலையம், வாடிக்கையாளர்களுடனான தனது நல்லுறவு மோசமாக பாதித்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.இதனிடையே, ஹவுஸ் ஒஃப் பேஷன்ஸ் இந்தச் சம்பவம் தொடர்பான சில சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.







Discussion about this post