மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 18 வயது இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருந்துள்ளார். இளைஞனை பொலிஸார் தேடிவந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழ இரவு குறித்த இளைஞனை கைது செய்ததுள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபர் இன்று (ஜன 25) புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






Discussion about this post