தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் யார் என்பதை அனைவரும் அறிவர் என்றும், தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பை என்றுமே நேசிக்கவில்லையென்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகச் சாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அறிமுக நிகழ்வு (25) நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழரசுக் கட்சியினர் இழுத்தடித்து விட்டு இறுதியில் நாம் கேட்கும் ஆசனங்களைத் தர முடியாது என்று கூறுவார்கள். அப்போது, நாம் வெளியேற முடியாது. ஆசனம் இல்லையென்று வெளியே வந்துவிட்டார்கள் என மக்கள் கூறத் தொடங்கிவிடுவார்கள். தமிழரசுக்கட்சினர் கூட்டமைப்பை நேசிக்கவில்லை.
அனைவரும் கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்று நாங்கள் கூறியபோது, இது நல்ல விடயம் வாருங்களென சம்பந்தன் கூறுகிறார். “இல்லை எங்களுக்கு இரண்டு மூன்று பேரில் உடன் பாடில்லை அதனால் இணைவது கஷ்டம்” என ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுமந்திரன் கூறுகிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் சுமந்திரன்தான் என்றும் அவர் தெரிவித்தார்.






Discussion about this post