இலங்கை மீது தற்போது ஒட்டப்பட்டுள்ள வங்குரோத்து ஸ்டிக்கரை குறுகிய காலத்தில் எம்மால் கழற்றிவிட முடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள போதும் மேலும் சில பிரச்சினைகள் மீதியாகவுள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், மிக விரைவில் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்களின் முன்னேற்றம் கருதியே நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி நாட்டை ஆட்சிசெய்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாடு முன்னோக்கி சென்ற நிலையில் வேறு அரசியல் தரப்பினரால் இனவாதம் மதவாதம் விதைக்கப்பட்ட நிலையே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தோல்வியடைய காரணமானது.
எவ்வாறெனினும் அந்தக் கட்சி அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் பக்கமே நின்று செயற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றின்போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.




Discussion about this post