மஹரகம நகரசபைக்கு சொந்தமான நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்களில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெயன்துடுவ-மாபிம-பியகம வீதியைச் சேர்ந்த திதுல ரஷ்மிக என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்கு நண்பர்களுடன் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






Discussion about this post