மின் கட்டணங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதையடுத்து அந்த கட்டண அதிகரிப்பு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அலகுகளுக்காக இதுவரை அறவிடப்பட்டுவந்த 8 ரூபா கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கிணங்க, 31 முதல் 60 வரையான அலகுகளுக்காக இதுவரை அலகொன்றுக்கு அறவிடப்பட்டுவந்த 10 ரூபா கட்டணம் தற்போது 37 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 61 முதல் 90 வரையிலான அலகுகளுக்கு இதுவரை அறவிடப்பட்டு வந்த அலகொன்றுக்கான 16 ரூபா தற்போது 42 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
91 அலகு முதல் 120 வரையான அலகு மற்றும் 121 முதல் 180 அலகு வரையான மின்கட்டணத்திற்கு இதுவரை அறவிடப்பட்டு வந்த 32 ரூபா கட்டணம் தற்போது 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 181க்கு அதிகமான அனைத்து அலகுகளுக்கும் தற்போது அறவிடப்பட்டு வரும் 75 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மின்சாரசபை தெரிவித்துள்ளது.
அதேவேளை முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவரையிலும் 31இலிருந்து 60 அலகுக்கான நிலையான கட்டணம் 550 ரூபாவாகவும் 61 முதல் 90 அலகு வரையிலான நிலையான கட்டணம் 650 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 91 அலகு முதல் 120 அலகுவரை மற்றும் 121 முதல் 180 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை மதவழிபாட்டுத் தலங்கள், தர்மசாலைகள் ஆகியவற்றுக்கான முதல் 30 அலகுகளுக்காக அறவிடப்பட்டு வந்த 8 ரூபா கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 31 முதல் 90 அலகு வரையிலான அலகுகளுக்கு 15 ரூபாவாக இருந்த கட்டணம் 37 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தர்ம நிலையங்களுக்கு முதல் 30 அலகுகளுக்கு அறவிடப்பட்டுவந்த நிலையான கட்டணம் 90 ரூபாவில் இருந்து 400
ரூபாவரை அதிகரித்துள்ளதுடன் 31 முதல் 90 வரையிலான அலகுகளுக்கு 120 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் தற்போது 550 ரூபா வரையும் 180க்கு அதிகமான அலகுகளுக்கு அறவிடப்பட்டு வந்த 1500 ரூபா நிலையான கட்டணம் தற்போது 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் துறைக்கான முதல் 300 அலகுகளுக்கு ஒரு அலகுக்காக அறவிடப்பட்டுவந்த 20 ரூபா தற்போது 26 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க 300 அலகுகளுக்கு அதிகமான ஒவ்வொரு அலகுக்கும் 20 ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 26 ரூபாவாக அதிரிக்கப்பட்டுள்ளது.
முதல் 300 அலகுக்காக அறவிடப்பட்டு வந்த 960 ரூபா நிலையான கட்டணம் 1,200 ரூபாவாகவும், 300 அலகுகளுக்கு மேல் கைத்தொழில் துறைகளுக்கு அறவிடப்பட்டு வந்த 1,500 ரூபா நிலையான கட்டணம் தற்போது 1600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது ஸ்தாபனங்கள் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்காக 180 அலகுகளுக்கு குறைந்த கட்டணம் ஏற்கனவே 25 ரூபாவாக இருந்துள்ள நிலையில் அதன் அலகொன்றுக்கான விலை 40 ரூபாவாகவும் 180 அலகுக்கு மேலான கட்டணம் 32 ரூபாவிலிருந்து 47 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது ஸ்தாபனம், ஹோட்டல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு 180 அலகுகளுக்கு நிலையான கட்டணமாக அறவிடப்பட்டுவந்த 360 ரூபா தற்போது 1,000 ரூபாவாகவும் 180க்கு அதிகமான அலகுகளுக்கு 1,500 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 1,600 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மின்கட்டண திருத்தத்திற்கு அமைய 30 மின்






Discussion about this post