சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கு வசதியாகவும் வீடியோ தொழில்நுட்ப மூலம் அவர்களோடு தொடர்புகொள்ளும் வகையில் E VISIT முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் இணையத்தளத்துக்குச் சென்று பதிவுசெய்துகொள்வதன் மூலம் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கான நேரம் மற்றும் தினங்களை ஒதுக்கிக்கொள்ளக்கூடிய வசதிகளை வழங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, சிறைக்கைதிகள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் காலத்தை நீடிக்கும்போது அதற்கான தினத்தை பெற்றுக்ெகாள்வதற்கும் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் சிறைக்கைதிகளில் நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் செயற்பாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையின்படி அவர்களை விடுதலைசெய்வதற்கும் தண்டனைக் காலத்தை குறைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, 16 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட போதைப் பொருளுக்கு அடிமையானதன் காரணத்தால் புனர்வாழ்வு பெற்றுக்கொண்டுள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஐந்து வருட கால திட்டமொன்றின் கீழ் 9 முக்கிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு வேலைத்திட்டமொன்றை தயாரிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்குள் சிறைக்ைகதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல் மற்றும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் கையடக்கத்தொலைபேசி உபயோகித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் சிறைச்சாலைகள் கட்டமைப்பு மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார்துறையினரின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்ைக மேற்கொள்ளப்படுவதுடன் சிறந்த திறமையுடைய சிறைக்ைகதிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்ைக எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறு குற்றங்களுக்காக சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சிறைக்ைகதிகளை வீடுகளில் வைப்பதற்கும் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் முறைமையொன்றை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்தும் மக்களின் நிதி மூலமே சிறைக்கைதிகளின் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் அவர்களின் உணவுக்கான செலவாக 4.7 பில்லியன் செலவிடப்படுவதுடன் சிறைச்சாலை கட்டமைப்புக்காக மேலும் 11 பில்லியனையும் வருடாந்தம் செலவிடவேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






Discussion about this post