நாட்டின் வங்கித் துறையை பாதுகாப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(20) நடைபெற்ற 33ஆவது வங்கி ஊழியர் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.“தடைகளை பொருட்படுத்தாது, தற்போதைய நிலைமைக்கு அமைவாக வங்கி கட்டமைப்பை முன்னகர்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் தொழில்சார் வங்கி ஊழியர்களின் மாநாடு நடைபெற்றது.இலங்கையின் வங்கித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
Discussion about this post