கொழும்பிலிருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.3 கோடி20 இலட்சம்மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சென்னை சுங்க அதிகாரிகள், 2 பெண்களை கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பிலிருந்து விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 572 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வந்ததையும் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து மதிப்புள்ள 815 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பெண்களிடம் இருந்து ரூ.3 கோடி 20 இலட்சம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




Discussion about this post