முட்டைக்கான அதிகப்பட்ச விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், இவ்விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் விலை 46 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, முட்டைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் இலாபமீட்ட முடியாதுள்ளதாலேயே, முட்டைக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை கறிக்கோழி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அஜித் குணசேக்கர தெரிவித்துள்ளார். இதையடுத்து,முட்டை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்,குறிப்பிட்டுள்ளார்.
முட்டை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிடின்,எதிர்வரும் சில நாட்களில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்தும் தெரிவித்துள்ளார்.




Discussion about this post