பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.உயிரிழந்தவர் மாத்தளை நாவுல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேற்று மாலை பனாகொட இராணுவ முகாமின் 12 ஆவது பீரங்கி படையணிக்கு முன்பாக இந்த இராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.பனாகொட இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post