Wednesday, August 5, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

சாதாரண தரப் பரீட்சை தாமதமாகும் சாத்தியம் !

by editor
March 29, 2023
in இலங்கை
0 0
A A
0
பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு
Share on FacebookShare on Twitter

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை களுக்காக மேலும் 4ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் விடைத்தாள் மதிப்பீட்டு செயற்பாடுகள் தொடர்ந்து காலதாமதமாகுமானால் சாதாரண தரப் பரீட்சை இரு வாரங்களுக்கு ஒத்திவைக் கப்படலாம் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப் பிட்டார்.

தொழிற்சங்க உரிமைகளுக்காக மாணவர் களின் எதிர்காலத்தை பலியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் காலதாமதமாவது பிரச்சி னையாக மாறியுள்ளது.

எமது நேர அட்டவணையின் பிரகாரம் முன்னோக்கிச் செல்வதற்கு பல்வேறு சவால்கள் இருக்கின்றன. ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்கள் இன்னும் சில தினங்களில் அவர்களின் கடமைகளை முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறோம். எங்களால் முன்னெடுக்கப்படவேண்டிய கொடுப் பனவு அதிகரிப்பு உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரை யாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாகவே, பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு செயற்பாடுகள் காலதாமதமாகியுள்ளன. மூன்றரை இலட்சம் மாணவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தார்கள். அந்த மாணவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலமும் இந்தப் பரீட்சை முடிவுகளை பொறுத்தே தீர்மானிக்கப்படும். எனவே, எதிர்வரும் சில தினங்களில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கு மென்று எதிர்பார்க்கிறேன்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே, சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியும். தற்போதாவது, விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்ப டுமாக இருந்தால் சாதாரண தரப் பரீட்சையை உரிய நேரத்தில் நடத்த முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒன்று அல்லது இரு வாரங்கள் சாதாரண தரப் பரீட்சை காலதாமதமாகக் கூடும்.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக 14 ஆயிரம் வரையிலான ஆசிரியர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். மேலும், 4ஆயிரம் பேருக்கான தேவை இருக்கிறது. அதுதொடர்பில், மீண்டும் அறிவிப்பொன்றை வெளியிடுவதற்கு பரீட்சை ஆணையாளர் நாயகம் எதிர்பார்த்துள்ளார். மேலும், நடைமுறைப் பரீட்சைகள் நாளையிலிருந்து (இன்றிலிருந்து) ஆரம்பமாகவுள்ளன. வழமையாக, விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்ததன் பின்னரே, நடைமுறைப் பரீட்சை நடத்தப்படும். இருந்தபோதும், நடை முறைப் பரீட்சையை நேரத்துடன் நிறைவு செய்து விட்டால் காலதாமதத்தை ஓரளவு குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்பு அவசியமாகும். தொழிற்சங்க உரிமைகளை வெற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனால், அதற்காக உரிமைக ளுக்காக நீதிமன்றத்துக்கு கூட செல்லமுடியாத மாணவர்களை அதற்கு பலியாக்க முடியாது. இந்த செயற்பாட்டினால் அப்பாவி மாணவர்களின் உரிமைகளே மீறப்படுகின்றன. எனவே, இதுதொடர்பில் சகலரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

Related Posts

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
இலங்கை

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
இலங்கை

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு
இலங்கை

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

July 16, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version