தொழில் நிமித்தமாக குவைத்துக்குச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த 52 பேர், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று (24) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இவ்வாறு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு இதுவாகும் என்பதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL -230 எனும் விமானத்தில் அவர்கள் வந்தனர். அவர்களில் 17 ஆண்களும் 35 பெண்களும் இருந்ததாக, விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.




Discussion about this post