12 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்று யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக ஆணையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த நபர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், குற்றத்தடுப்பு பிரிவிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








Discussion about this post