சுங்க கட்டளைச் சட்டம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி 607.5 மெட்ரிக் தொன் பழுப்பு சீனியை நாட்டிற்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனம், அதற்கான அபராதத் தொகையை திறைசேரியில் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதன்படி, மொத்தமாக 160 மில்லியன் ரூபா தண்டப்பணம் திறைசேரிக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.வழக்கு எண் PCAD/2023/0001/CCR/0006 கீழ் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மற்றும் அதன் தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மொத்த அபராதத் தொகையையும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இறக்குமதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட பழுப்பு சீனி வெள்ளைச் சீனி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தமையை அண்மையில் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
Discussion about this post