பொல்காவெலயில் இருந்து இரத்மலானை நோக்கி பயணிக்கும் ‘பௌசி’ அலுவலக ரயிலில் மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டுகளுடன் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணித்த 45 பயணிகள் தவறான டிக்கெட்டுகளுக்காக பிடிபட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இன்று கோட்டை புகையிரத செயற்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு சோதனையின் போது பிடிபட்ட இவர்களில் 37 பயணிகளிடமிருந்து 114,160 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீதமுள்ள பயணிகள் அபராதம் செலுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் விடுவிக்கப்பட்டதாக செயல்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
Discussion about this post