கண்டியில் பாதசாரிகளின் கடவையினூடாக வீதியை கடந்து சென்ற தந்தையும் மகனும் நேற்று வாகன விபத்தில் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்தியவர் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினரெனவும் அவரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் கண்டி புவெலிகட பிரதேசத்திலேயே இவ்வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. மேற்படி தந்தையும் மகனும் வீதியின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்துக்கு பயணித்த போதே ஜீப் வண்டியொன்று இவர்களில் மோதி, இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியை, மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரே செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கண்டி புவெலிகட சங்கமித்த மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 41 வயது சந்திரிக்க சம்பத் ரொட்ரிகோ என்ற தந்தையும் 11 வயதான விமந்த ரொட்ரிகோ என்ற மகனுமே பலியாகினர்.




Discussion about this post