முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் பேலியகொடையில் வைத்து நேற்று மாலை 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பேலியகொடை துட்டகைமுனு பிரதேசத்தில் நேற்றையதினம் இரண்டு சுற்றிவளைப்பு தேடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, போதையூட்டும் குளிசைகள் 400 யை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
28 வயதான இருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.




Discussion about this post