தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 39,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இம்முறை ஒரே நேரத்தில் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் பயிலுனர்கள் ஏழாயிரம் பேருக்கு எதிர்வரும் 16ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனை தவிர தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் நிலவும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய 26 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Discussion about this post