நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபத்துக்களில் 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர் அத்தோடு 2,160 பாரிய விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3,201 சிறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்பதுடன், 102 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்






Discussion about this post