உலகக் கிண்ணத்தின் தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின், மூன்றாவது போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு 356 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அலி நசீர் 44 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 18 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகம் 356 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட தயாராக உள்ளது.




Discussion about this post