2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன.
சங்கீதம் மற்றும் நாட்டியம் பாட செயன்முறை பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கவில்லை எனின், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளத்திலிருந்து அதனை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.






Discussion about this post