பிரசவம் தாமதமானதால் மருந்து உட்கொண்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிகிரியா பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, இதுவரை குழந்தை இல்லாத காரணத்தால்,
அவர் தன் தந்தை வழி உறவினர் ஒருவர் நடத்தும் கோவிலுக்குச் சென்று மூன்று நாட்கள் உள்ளூர் மருந்தைக் உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த யுவதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று ஜெயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






Discussion about this post