Sunday, June 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home ஆன்மீகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஒகஸ்ட் 21 ஆரம்பம்; முன்னேற்பாடு தொடர்பாக கலந்துரையாடல்

by editor
July 21, 2023
in ஆன்மீகம், இலங்கை
0 0
A A
0
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஒகஸ்ட் 21 ஆரம்பம்; முன்னேற்பாடு தொடர்பாக கலந்துரையாடல்
Share on FacebookShare on Twitter

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (21) காலை 10 மணியளவில் யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

குறித்த தீர்மானங்களின் படி,
ஒகஸ்ட் 20ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது. அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதிநிதிகள், அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறு திருமுருகன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரது பிரதிநிதி, யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA
இலங்கை

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
இலங்கை

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!
இலங்கை

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version