காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீட்டில் இருந்து 1.659 கிலோ கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள குறித்த வீடுமுற்றுகையிடப்பட்டது.
இதன் போது வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்டு பதுக்கிவைத்திருந்த ஒரு கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் குறித்த நபரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானித்துள்ளதாக குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.





Discussion about this post