Sunday, March 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

சிறுநீரக தாரை தொற்று: ‘கணவருக்கு இருந்தால் மனைவிக்கும் சிகிச்சை அவசியம்’

by editor
September 5, 2023
in அறிவியல்
0 0
A A
0
சிறுநீரக தாரை தொற்று: ‘கணவருக்கு இருந்தால் மனைவிக்கும் சிகிச்சை அவசியம்’
Share on FacebookShare on Twitter

சிறுநீரக தாரை தொற்று ஏற்பட்ட ஒருவர் மூலமாக அவருடைய துணைவர் அல்லது துணைவிக்கு எளிதாக தொற்று பரவும் என்றும் ஒருவர் குணமடைய வேண்டுமெனில், இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி தெரிவிக்கிறார்.

சிறுநீரக தாரை தொற்றை ஆரம்பக்கட்டத்தில் கவனிக்காமலிருந்தால், அதன் அதிகபட்ச பாதிப்பாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் மருத்துவர் சாந்தி கூறுகிறார்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்படுவது, மிகவும் குறைவாக சிறுநீர் வெளியேறுவது ஆகியவை ஆரம்ப அறிகுறிகள் என்றும் ஒருசிலவேளைகளில், குளிர்ஜுரம், தலைவலி போன்றவைகூட அதன் காரணமாக ஏற்படும் என்கிறார்.

கர்ப்ப காலத்தில் ஏற்படுவது ஏன்?

அதிகம் இந்த பிரச்னையை சந்திப்பதற்கான காரணங்களை விளக்கினார் மருத்துவர் சாந்தி.

”பெண்களின் உடல்கட்டமைப்பும் ஒரு காரணம். சிறுநீர் வெளியேறும் குழாய்க்கு அருகே பிறப்புறுப்பு துவாரம் இருக்கிறது. அதில்தான், மாதவிடாய் வெளியேறும், உடலுறவுக்கான வாயிலாகவும் அது அமைகிறது. அதோடு மலதுவாரமும் அருகில் இருக்கிறது. இதனால் தொற்று ஏற்பட்டால் பரவுவது மிகவும் எளிதாக இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் நீளமான நாப்கின்தான் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துகிறார்கள். அது சிறுநீர்க்குழாய்,பிறப்புறுப்பு மற்றும் மலதுவாரம் என மூன்றிலும் படும் வகையில்தான் வைக்கப்படுகிறது என்பதால் தொற்று பரவுவது வெகு எளிது,”என்கிறார்.

மேலும், ”கர்ப்பகாலத்தில், கர்ப்பப்பை விரியும். சிறுநீர் பையை அது அழுத்தும்,அதனால், ஒருசில சமயம் சிறுநீர் கழித்தால்கூட, ஒரு சிறிய அளவு சிறுநீர் மீண்டும் சிறுநீர் பையில் தங்கியிருக்கும் என்பதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்,”என்கிறார்.

அடுத்ததாக, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது எப்படி என கேட்டபோது, தொற்று ஏற்பட்ட ஆண் அல்லது பெண்ணிடம் இருந்து உடலுறவின்போது அவரது துணைவருக்கு பரவுகிறது என்கிறார்.

”உடலுறவு கொள்வதற்கு முன்பும், பின்னரும் பிறப்புறுப்பை தண்ணீரால் கழுவவேண்டும். ஒருவருக்கு தொற்று இருந்தால், மற்றவருக்கு எளிதாக அந்த சமயத்தில் பரவிவிடும். அதனால், ஒருவருக்கு தொற்று இருந்தால், இருவரும் சிறுநீர் பரிசோதனை செய்துகொண்டு, இருவரும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைதான் நாங்கள் பரிந்துரை செய்கிறோம்,”என்கிறார் சாந்தி.

தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்தவில்லை என்றாலும்கூட சிறுநீரக தாரை தொற்று ஏற்படும் என்றும் ஒருநபர் குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது என்கிறார்.

”நம்மில் சிலர் வேலை காரணமாக இருந்தாலும், வீட்டில் ஓய்வில் இருந்தால் கூட, தண்ணீர் குடிப்பதைப் பெரிதும் மறந்துவிடுவது உண்டு. உடலின் தண்ணீர் தேவைக்கு ஏற்ப குடிக்காமல் இருந்தால், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி ஆகியவை ஏற்படும்,”என்கிறார் அவர்.

என்ன பரிசோதனை?

சிறுநீரக தாரை தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது பற்றி பேசிய அவர், ”சிறுநீர் கழித்த பின்னர், சுத்தமாக கழுவுவது, உடலுறவுக்கு முன்பும், பின்பும் கழுவுவது, தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பதைப் பின்பற்றுவது, மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கினை நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்வது போன்றவற்றில் கவனமாக இருக்கவேண்டும். அறிகுறிகள் இருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டால் உடனே யூரின் கல்ச்சர் என்ற பரிசோதனை செய்துகொள்வது அவசியம்,” என்கிறார் மருத்துவர் சாந்தி.

Related Posts

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
அறிவியல்

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஒருவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தினால், அது மிகவும் பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

February 8, 2026
மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்
அறிவியல்

மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்

January 13, 2026
ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்
அறிவியல்

ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்

January 13, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version