நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆயிரத்து 637 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தரவுகளுக்கு அமைய மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் ஆயிரத்து 209 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.






Discussion about this post