நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் , நுகர்வோர் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அடுத்த வாரம் முதல் இப்பயிற்சி ஆன்லைன் முறை மூலமாகவும் நிறுவனங்களின் பயிற்சி மையங்களிலும் தொடங்கப்படும்.
நிறுவன வளாகத்தினுள் வாடிக்கையாளர்களை மதித்து அவர்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதற்காக விசேட பயிற்சிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, 22ஆம் திகதி, பொரளையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், பல்பொருள் அங்காடி நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் சீருடையை அணிந்து நிறுவனத்திலோ அல்லது வேறு இடங்களிலோ பிரச்சினைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பல்பொருள் அங்காடிகள் முடிவு செய்துள்ளன.






Discussion about this post