ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலம் துன சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.இதன் காரணமாக பொரளை-கொட்டாவ வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post