கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த வீதியின் பகுதி இன்று (06) காலை சீரமைக்கப்படவுள்ளது.
நேற்று (05) பிற்பகல் அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பத்கொடை பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றிரவு வீதியின் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதால், இன்று காலை இந்தப் பணியை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், வீதி சீரமைக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், பத்கொடையில் ஆபத்தான நிலையில் உள்ள 10 வீடுகளின் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






Discussion about this post