பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.






Discussion about this post