Tuesday, March 24, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

by editor
January 4, 2024
in இந்தியா, இலங்கை
0 0
A A
0
நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!
Share on FacebookShare on Twitter

பருத்தித்துறைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி 2 படகுகளுடன் காரைக்கால் பகுதியை சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த, படகின் உரிமையாளர் உள்ளிட்ட 13 மீனவர்கள், 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையுடன் கடந்த 22 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், கைது நடவடிக்கையின் போது மீனவர்களால் தாக்கப்பட்டு இலங்கை கடற்படையினர் மூவர் காயமடைந்தமை தொடர்பான குற்றச்சாட்டில், மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையுடன் கடந்த 28 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

ஏனைய 12 மீனவர்களுக்கெதிரான வழக்கில், படகின் உரிமையாளரையும் குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இணைத்து, சந்தேகநபருக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் விளக்கத்தை வழங்க வேண்டியிருப்பதன் காரணமாக அவர்களை ஜனவரி 3 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீரியல் வளத்துறை திணைக்களத்தினரால் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கமைய, குறித்த 12 இந்திய மீனவர்களும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
இலங்கை

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026
மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை
இலங்கை

மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை

March 23, 2026
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka
இலங்கை

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka

March 23, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026
மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை

மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை

March 23, 2026
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka

March 23, 2026
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version