Monday, March 23, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

by Editor
March 13, 2024
in அறிவியல்
0 0
A A
0
Share on FacebookShare on Twitter

பட்டினி கிடக்காமல் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும், இல்லையென்றால் இரைப்பையில் அமிலம் சுரந்து அது இரைப்பைச் சுவர்களைப் புண்ணாக்கி அல்சரை ஏற்படுத்தி விடும் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். மாத்திரை சாப்பிட்டாலே அல்சர் ஏற்படும் என்கிற நம்பிக்கையும், காரமான உணவுகளை சாப்பிட்டால் அல்சர் வரும் என்கிற நம்பிக்கையும் நம்மிடையே நிலவுகின்றன. அல்சர் என்கிற வயிற்றுப்புண் ஏற்படுவதற்கும் நாம் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். அல்சர் ஏற்படுவதற்காபயம் தேவையில்லை

“இன்றைக்கு மருத்துவ அறிவியல் அசுர வளர்ச்சி கண்டிருக்கிற நவீன சூழலில் அல்சர் பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. அப்படியே அல்சர் ஏற்பட்டாலும் அதற்கு பயப்படத் தேவையில்லை. அல்சரை மிக எளிதில் குணமாக்க முடியும். அப்படி இருந்தாலும், வராமல் தற்காத்துக் கொள்வதுதான் நல்லது. வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. அல்சர் குறித்த தவறான நம்பிக்கைகள் நம்மிடையே நிலவுகின்றன. காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அல்சர் வந்து விடும் என பயக்கிறார்கள். வட இந்தியாவில் எல்லாம் ரொட்டி, சாப்பாடு என எதனைச் சாப்பிட்டாலும் பச்சை மிளகாயை எடுத்துக் கடித்துக் கொண்டு சாப்பிடுவார்கள். உண்மையில் காரமான உணவுகளைச் சாப்பிடுவது இரைப்பைக்கும் உடல் நலத்துக்கும் உகந்தது. வயிற்றுப்புண் வந்து விடுமோ என்கிற பயம் தேவையற்றது.

அசிடிட்டி வேறு… அல்சர் வேறு…

சாப்பிடாமல் விட்டாலோ அல்லது நேரம் கடந்து சாப்பிட்டாலோ இரைப்பையில் சுரக்கும் அமிலம் அரித்து அல்சர் வரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை. வயிற்றில் செரிமானத்துக்காக சுரக்கும் அமிலத்தைத் தாங்கும்திறன் நம் இரைப்பைக்கு இருக்கிறது. ஆகவே பட்டினி கிடப்பதால் அல்சர் வராது, அசிடிட்டிதான் வரும். நேரம் தாழ்த்திச் சாப்பிடுகையில் வயிற்றில் வழக்கத்துக்கும் அதிகமான அமிலம் சுரந்து அது சாப்பிட்ட பிறகு இரைப்பையின் மேற்பகுதியில் வந்து தங்கும்போதுதான் அசிடிட்டி ஏற்படுகிறது. சில வேளைகளில் அந்த அமிலம் உணவுக்குழாய் வழியாக மேலே பீய்ச்சி அடித்து எரிச்சலை ஏற்படுத்தலாம். இதுதான் அசிடிட்டியின் விளைவுகள். அல்சர் என்கிற வயிற்றுப்புண் இதிலிருந்து வேறுபட்டது.

ஹோட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் அல்சர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகலாம் என்கிற நம்பிக்கையும் தவறானது. ஹோட்டலில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படும்போது அதை சாப்பிடுகையில் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு, அதன் விளைவே வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுமே தவிர அல்சர் ஏற்படாது. வயிற்றுப்பிரச்னை என்றாலே அல்சர் என்று நினைத்து விடக்கூடாது. பித்தப்பையில் கல் இருந்தால் பித்தம் சரியான அளவில் சுரக்காமல் போகும். இதனால் கூட வயிற்று வலி ஏற்படலாம்.

ன உண்மையான காரணம் எது என்பது பற்றி விளக்குகிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் நீலமேகம்…

அல்சர் ஒரு பாக்டீரியா தொற்று

மேற்சொன்ன எவையும் அல்சருக்குக் காரணம் இல்லையென்றால் எதனால்தான் அல்சர் ஏற்படுகிறது? இரண்டே காரணங்கள்தான். H.pylori என்கிற பாக்டீரியா தொற்றுதான் அல்சர் ஏற்பட முக்கியக் காரணம். NSAID (Nonsteroidal anti inflammatory drugs) அதாவது காய்ச்சல் மற்றும் வலிகளுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் அல்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. மருத்துவர் பரிந்துரையில்லாமல் நாமாகவே மருந்தகத்துக்குச் சென்று மாத்திரை வாங்கிச் சாப்பிடுதின் விளைவு இது. இவை இரண்டும்தான் நேரடியான காரணங்கள். புகைபிடித்தல், தினசரி மது அருந்துதல், சாப்பிடாமல் தவிர்த்தல் ஆகியவை அல்சரை மறைமுகமாகத் தூண்டக்கூடியது. முழுநேரம் மது அருந்தக்கூடிய குடி நோயாளிகளுக்கு அல்சர் வர வாய்ப்பிருக்கிறது என்று சொல்ல முடியுமே தவிர, கண்டிப்பாக அல்சர் வரும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அல்சர் ஒரு பாக்டீரியா தொற்று என்பதை புரிந்து கொண்டாலே போதும்.

எப்படிக் கண்டறிவது?

ஒருவருக்கு அல்சர் இருப்பதை இரைப்பையில் எண்டோஸ்கோபி செய்து பார்ப்பது, பயாப்சி எடுத்து ஆய்வு செய்வது மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். அப்படியாக அல்சர் கண்டறியப்பட்டால் மருந்து மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி விட முடியும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டு கேடு விளைவிக்கக்கூடிய ஜங்க் உணவுகளைத் தவிர்த்து வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடித்தல், நன்றாகத் தூங்குதல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாத் தொற்றில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். மருத்துவர் பரிந்துரையின்றி எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் இருப்பதும் அவசியம்” என்கிறார் நீலமேகம்.

Related Posts

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
அறிவியல்

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஒருவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தினால், அது மிகவும் பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

February 8, 2026
மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்
அறிவியல்

மாணவர்களின் எதிர்காலமும் செயற்கை நுண்ணறிவும்

January 13, 2026
ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்
அறிவியல்

ஜப்பானியர்கள் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த 5 தான் சீக்ரெட்

January 13, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version