அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ (Rebuilding Sri Lanka) நிதியத்திற்கு வழங்கப்பட்டது.
அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் (NIMH) அனைத்து ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம், அவசர அனர்த்த நிலையைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வு இன்று (23) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இதற்கமைய, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களிடம் 340,000 ரூபா பெறுமதியான குறித்த நிதி நன்கொடையை, அகில இலங்கை செவிலியர் சங்கத்தின் அங்கொடை தேசிய மனநல நிறுவன கிளைத் தலைவர் காமிணி குமாரசிங்க உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.



Discussion about this post