ஹோமாகம – மொரகஹஹேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து, தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம – மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வின் போது, மாணவர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியபோதே குறித்த மாணவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Discussion about this post