2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மாற்றங்களும் ஏற்கனவே நடந்துள்ளன என்றும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வரி உயர்வு ஏற்கனவே நடந்து விட்டது. செலவுகள் தொடர்பாக மிகக் குறைவான விவரங்கள் உள்ளன. இவை அனைத்தும் அப்படியே உள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம், இது மொத்தமாக 465 மில்லியன் ஆகும். அதில் எந்த மாற்றமும் இல்லை.” என கூறியுள்ளார்.




Discussion about this post