Thursday, July 30, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

உள்நாட்டில் இலவச பயிற்சி வெளிநாடுகளில் தொழில்

by editor
November 30, 2022
in இலங்கை, உலகம்
0 0
A A
0
உள்நாட்டில் இலவச பயிற்சி வெளிநாடுகளில் தொழில்
Share on FacebookShare on Twitter

நாட்டில் அரசின் பெருமளவு நிதி செலவில் கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டுவிட்டு பின்னர் நாட்டுக்கு சேவை வழங்காது வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மருத்துவ கற்கை மற்றும் பயிற்சிகளுக்காக ஒரு மாணவருக்கு அரசாங்கம் 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிடுவதாக சபையில் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கும் சேவையானது அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை விட அதிகமானது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டில் மேலும் மூன்று மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊவா வெல்லஸ்ஸ, குருநாகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதனை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மருத்துவத்துறையில் பட்டப்பின் படிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் அதற்கான செயல்பாடுகளை

முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் அதன் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் பூனாவில் உள்ள இத்தகைய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சமனானதாக இலங்கையில் அதனை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாடுகள் உதவ வேண்டும்.

அதேவேளை மருத்துவத் துறையில் டாக்டர்களுக்காக பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர் ஒருவருக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது.

நாட்டுக்காக அவர்களது சேவையை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்தளவு தொகை அவர்களுக்காக செலவிடப்படுகிறது. ஆனாலும் அனைத்து பயிற்சிகளையும் தாய்நாட்டில் பெற்றுக் கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அவர்களது சேவைகளை வழங்குகின்றனர்.

இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எமது நாட்டு டாக்டர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாட்டின் பெரும் நிதி செலவில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சேவைகளை மேற்கொள்வதால் அந்த சேவைகள் அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நிதியை விட அதிகமாகிறது என்பதையும் ஜனாதிபதி சபையில் சுட்டிக்காட்டினார்.

Related Posts

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
இலங்கை

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
இலங்கை

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு
இலங்கை

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

July 16, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version