எல்பிஎல் போட்டி ஒன்றில் நேற்று, காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கண்டி ஃபால்கன்ஸ் அணியின் சாமிக்க கருணாரத்னவுக்கு, ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் நான்கு பற்களை இழந்துள்ளார்.
எல்பிஎல் 2022 தொடரின் நான்காவது போட்டியில் பிடி ஒன்றை எடுக்க முயற்சித்த போது, அவர் முகம் அடிபட்டுள்ளது. பின்னர் பந்தும் அவரது முகத்தைத் தாக்கியுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து உடனடியாக சத்திரசிகிச்சைக்காக காலியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சாமிக்க உறுதியுடன் இருப்பதாகவும், மீண்டும் அவர் களமிறங்குவார் என்றும், அவருடைய அணியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.






Discussion about this post