நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசடைந்துள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில் “இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இந்தியாவிலிருந்து வரும் காற்றால் கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளது.
இந்த நிலைமை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல், சுவாச நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்துவதே சிறந்தது. மேலும் முகக்கவசத்தை அணிவது முக்கியம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









Discussion about this post