இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக, இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான பொறியியலாளர் SMDLKD அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை பதவி விலகுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளதாக அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தலைவர் நிறைவேற்றத் தவறியதால், சட்டத்தின் அடிப்படையில் அமைச்சர் இந்த முடிவை எடுத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.






Discussion about this post