பௌத்த மதத்தின் ஊடாக போஷிக்கப்பட்ட நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் மகா சங்கத்தினரிடம் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்தார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்தார்.
மேலும் நாட்டின் கலாசாரத்துக்கும் ஒழுக்கத்துக்கும் கேடு விளைவிக்கும் பிரேரணைகளை எதிர்க்குமாறும் அவர் வலியுறுத்தினார்.






Discussion about this post