பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி மட்டுமல்ல கூட்டணி சம்பந்தமாக 15 கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பரந்தப்பட்ட கூட்டணி அமையும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல புதிய அமைச்சரவையும் விரைவில் நியமிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






Discussion about this post