எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறும்.
இந்த நிலையில், அனுரதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளை ஏற்றிச் செல்ல பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை – முறிகண்டி இடையே மாத்திரம் பயணிக்கும் யாழ்ராணி ரயில், குறித்த ஐந்து மாத காலப்பகுதியில் வவுனியா வரை சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. (a)






Discussion about this post