ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கலவரத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு விடயங்களுக்காக சிறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளறன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் மிஸ் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக கடந்த 13ஆம் திகதி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தமை மற்றும் அதனை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்றாம் வருட மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் 04.03.2022 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.





Discussion about this post