நேற்று (2) நள்ளிரவு முதல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானம், இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஊடகங்கள் வினவியப்போது கட்டணங்களை திருத்துவது சாத்தியமா என்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டோ தெரிவித்தார்.
Discussion about this post