முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று (சனிக்கிழமை) முல்லைத்தீவு வள்ளிபுனம் மாலை நேர கல்வி நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இங்கு இடம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்ததோடு ஜனாதிபதியுடன் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் அனைத்து தமிழ் உரிமைக்காக பாடுபடும் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கி செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 50இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post