Saturday, August 1, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம்  சாத்தியமில்லை – டக்ளஸ்

by editor
January 10, 2023
in இலங்கை
0 0
A A
0
அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம்  சாத்தியமில்லை – டக்ளஸ்
Share on FacebookShare on Twitter

அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மூன்று கட்டங்களாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிப்பதுடன், குறித்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்ற கலந்துரையாடல்களிலும் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகவும் நிர்வாக அதிகாரங்களுக்கு ஊடாகவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் மாகாண அரசாங்கங்களிடம் கையளிப்பது முதலாவது கட்டம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களுள், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கு இடையூறாக இருக்கின்றவற்றை ஆராய்ந்து, அவை 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் பொருந்தும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் இரண்டாவது கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக, 13 வது திருத்தத்தின் சில விதிகளில் உள்ள தெளிவின்மையை நீக்குவதற்கும், தெளிவான முறையில் அதிகாரங்களை வரையறை செய்வதற்கும் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கும், அத்தோடு சட்டமியற்றுதல், நிர்வாக, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரங்களை அரசாங்கத்தின் பல்வேறு அடுக்குகள் மூலம் பயன்படுத்துவதற்கான வரையறைகளை  உருவாக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளுதல், போன்ற செயற்பாடுகளின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ’13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்க முடியும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் நீண்ட காலமாக நிலையாக இருந்து வருகிறோம்.

சில அரசியல் கட்சிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, 13வது திருத்தம் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்று கூறினாலும், 1988ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட வடக்கு,  கிழக்கு மாகாணத்திற்கு முதன்முறையாக நடைபெற்ற தேர்தல்களைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகளும் வடமாகாணத்தில் ஒரு முறையும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இது மாகாண சபை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது. மற்ற மாகாணங்களிலும் மக்கள் இப்போது இந்த முறைக்கு பழகிவிட்டனர்,

அதைத் தொடர்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. 13 வது திருத்தத்தின் ஊடான அதிகாரப் பகிர்வை சரியான முறையில் வரையறைப்படுத்தி அர்த்தமுள்ள முறையில் செயல்படுத்துவது ஒரு ஐக்கிய நாட்டிற்குள் பன்முகத்தன்மையையும் மற்றும் பன்மைத்தன்மையைக் கையாள்வதற்கான வழிமுறையையும் வலுப்படுத்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
இலங்கை

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
இலங்கை

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு
இலங்கை

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

July 18, 2026
சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

சீன ஆண்களுக்கு அரசின் எச்சரிக்கை – வெளிநாட்டு திருமணங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

July 18, 2026
ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 17, 2026
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்

July 16, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version