நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்தனர்.யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.வீதியில் நடந்து சென்றவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.பளையில் எதிர்த்திசையில் பயணித்த சைக்கிளை பஸ்ஸொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.விபத்தில் பலத்த காயமடைந்த 60 வயதான சைக்கிள் ஓட்டுனர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தூணில் மோதியதில் அதனை ஓட்டிச்சென்றவர் உயிரிழந்தார்.ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 49 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.
நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.விபத்தில் காயமடைந்த இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்தார்.அவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியை சேர்ந்த 56 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Discussion about this post