பேராதனை தடுவாவ புராதன ரஜமஹா விகாரையின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விகாரையின் மேல் முற்றத்தில் சமய வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மண்மேடு சரிந்து விழுந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மண் மேட்டின் கீழ் புதையுண்டு படுகாயமடைந்த தேரர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
18 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post